கிழக்கு மகாணத்தைவிட்டு ஏனைய மாகாணங்களில் ஆசிரியர்களாக பல வருடங்களாக சேவையற்றிவரும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்
வெற்றிடமின்மையால் வெளிமாகாண ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டடோம். இனிவரும் காலங்களில் கிழக்கு மாகாண அரசாங்கம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வெளிமாகாண ஆசிரியர்களின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.
என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வெளி மாகாணங்களில் ஆசிரியர்களாகக் கடமை புரியும் ஆசிரியர்களின் ஒன்றியத்தின் தலைவர் பி.எஸ்.கோபிநாத் தெரிவித்துள்ளார். இந்த வியைடம் தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (25) விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
கடந்த கால கிழக்கு மாகாண அரசாங்கம், பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யவில்லை மாறாக தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள்கூட வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் நிலமை ஏற்பட்டது. முன்னைய கிழக்கு மாகாண கல்வி அரச அதிகாரிகளின் தவறான புள்ளிவிபரங்கள், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது.
தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெரும்பாலான முயற்சிகளைப் பாராட்டுகின்றோம். தமிழ், முஸ்லிம் இன மக்களின் அடிமட்ட உளவியல் நிலையை அறிந்து செயற்படுத்தப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டை மெச்சிக்கின்றோம்.
தற்போதைய கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனும்போது மகிழ்ச்சியாய் உள்ளது. ஆசிரியர்களின் வகை தரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவுகள் பெறப்படும் செயற்பாட்டை வரவேற்கின்றோம். வெளி மாகாணத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கும் கல்விப்புலமாக நாம் உள்ளோம். வாழ்க்கையின் உறவுநிலை திருமண உறவு போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை சவாலாக எடுத்துக் கொண்டு உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றோம்.
போக்குவரத்துப் பிரச்சனைகள் மிகவும் சிரமமாக உள்ளன. தவணைக்கு வீடு திரும்பும் நிலை, மாதாந்தம் வீடு திரும்பும் நிலை, என்பன காணப்படுகின்றன. எனவே மேற்படி நிபந்தனைகளை கிழக்கு மாகாண அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வெளிமாகாணத்தில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு அநீதி ஏற்படும்போது நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவேண்டும்,
வெளிமாகாண பாடசாலைகளில் சேவைக்காலம் நிறைவுற்றதும், சொந்த மாவட்டத்தில் கடமையாற்ற கிழக்கு மாகாண அரசாங்கம் அங்கீகாரத்தை உறுத்திப்படுத்த வேண்டும்.
ஆசிரிய சேவையில் புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும்போது வெளி மாகாணத்தில் ஆசிரிய சேவையிலுள்ளவர்களின் தரம், வகை என்பவற்றைக் கருத்தில் கொள்ளவைத்தலை உறுத்திப்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளும்போது கட்டம்கட்டமாக வெளிமாகாணத்திலுள்ள ஆசிரியர்களின் விடுவிப்புக்ளை சொந்த மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் வெளிமாகாண ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாவட்டத்தில் சேவையாற்றுவதற்கு அனுமதிப்பதோடு, ஆட்சேர்ப்புச் செய்யும்போதும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். என அதில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment