மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் கடந்த வியாழனன்று (22.12.2016) மட்டக்களப்பு சின்னப்பாலம் வாவியில் முச்சக்கர வண்டி வீழ்ந்ததில் காப்பாற்றப்பட்டு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அறுவரில் குடும்பப் பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (25.12.2016) சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.
ஏறாவூர், மீராகேணி வீதி, காட்டுமா மரத்தடி பகுதியைச் சேர்ந்தஅப்துல் காதர் சரீனா ( வயது 34) என்பவரே மரணித்துள்ளார்.
முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து 15 அடி ஆழமுள்ள வாவியினுள் குடைசாய்ந்து முற்றாக நீரில் மூழ்கியதால் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட ஆறு பேரும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
0 Comments:
Post a Comment