16 Nov 2016

ஏறாவூர்ப் பற்றிலுள்ள தனியார் காணிக்குள் விஹாரை கட்ட முனைந்த பிக்குவால் பதற்றம்

SHARE
(வீடியோ) 

மட்டக்களப்பு மங்களாராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், ஏறாவூர்ப் பற்று செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்து விஹாரை கட்ட முனைந்ததால் புதன்கிழமை (நொவெம்பெர் 16, 2016) அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அந்த அரச மரம் உள்ள இடத்தில் புத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் அங்கு இருந்ததாகவும் கூறி சர்சைக்குரிய அம்பிட்டிய  சுமணரத்ன தேரர் தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.

ஸ்தலத்திற்கு அம்பாறையிலுள்ள சிங்கள மக்கள் சிலரையும் இந்த பிக்கு அழைத்து வந்திருந்தார்.

பதற்ற நிலைமை நிலவிய வேளையில் அங்கு கரடியனாறு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். வியாழேந்திரன் ஸ்தலத்திற்கு விரைந்தார்.

குறித்த காணிக்குள் புத்த பிக்கு அத்துமீறி நுழையப் போகின்றார் என்று தகவல் எட்டியிருந்ததால் ஏற்கெனவே அந்தக் காணிக்குள் எவரும் உள் நுழைய முடியாதவாறு நீதிமன்ற உத்தரவைப் பொலிஸார் பெற்றிருந்தனர்.
சிறிது நேரம் நிலவிய பதற்றத்தை அடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவை தெரியப்படுத்தியதும் சர்ச்சைக்குரிய பிக்கு தான் அழைத்து வந்த சிங்கள ஆட்களுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: