இன்று நாட்டில் பாரிய வேலையில்லா பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்நாட்டு இளைஞர்களே. அப்படியான இளைஞர் தற்போது வேலையில்லாது
பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்
அதிலும் குறிப்பாக எமது பிரதேசத்தில்
இது பலமடங்குகளாகும். காரணம் எமது பகுதிகளில் அவர்கள் வேலை புரிவதற்கான தொழிற்சாலைகளோஇ
அல்லது தொழில் வாய்ப்புகள் இல்லை இதனால் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி எமது இளைஞர்கள்
பயணிக்கின்றனர்.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்
பற்று பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர். இ.வேணுராஜ் தெரிவித்தார். கடந்த மட்.எருவில்
கண்ணகி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இளைஞர் முகாமில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எம் இளைஞர்கள் எமது நாட்டின் வளங்கள்! ஏனைய நாடுகளின்
வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகவே இந்த நல்லாட்சி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் எமது பிரதேச இளைஞர், யுவதிகள் பயன்பெறக்கூடிய வகையில் பெரிய தொழிற்சாலை ஒன்றை
எமது பிரதேசத்தில் அமைக்க வேண்டும்
அதுபோல இளைஞர்இ யுவதிகள் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்
பலவற்றை இழந்திருக்கின்றோம் அது பணமாக இருக்கலாம் உயிராக இருக்கலாம் உடமைகளாக இருக்கலாம்
அனால் எந்த வேலையிலும் அழியச்சொத்தாக இருப்பது கல்வி ஆகவே படிப்பில் எப்போதும் அவதானமான
இருக்க வேண்டும். ஏனைய வரையும் ஊக்கப்படுத்தி அபிவிருத்தியை பெறஉதவுங்கள் அதுபோல எமது
பாரம்பரியங்களையும்இ பழமைவாய்ந்த கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர், யுவதிகளுக்காக
பல்வேறு பிரயோசமான வேலைத்திட்டங்கள் இசெயற்பாடுகளை முன்னொடுத்து வருகின்றது இளைஞர்
கழகம் என்பது .விளையாட்டு போட்டியுடன் மட்டும் மட்டுப்படுத்தாது கலைஇகலாசார, சமுக,
சமய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த இளைஞர் முகாம் தலைமைத்துவம்,ஆளுமை
விருத்தி, திட்டமிடல், திறன் அபிவிருத்தி போன்ற
பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது இவையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான விடயமாகும்.
என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment