மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நலம்புரிச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த அர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (11) பகல் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் மேற்படி வைத்தியசாலை நலம்புரிச்சங்க நிருவாகத்தினர், பொதும்கள் நோயாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் மற்றும், மருந்துக் கலவையாளர், வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டம் முன்நெடுக்கப்பட்டிருந்தது.
வைத்திய நிபுணர்கள் இல்லாத வைத்தியசாலையா பாரபட்சம் வேண்டாம் உடனடியாக நியமனம் செய், கட்டடங்களைக் கட்டுவது மலர்ச்சாலையாகப் பயன்படுத்தவா? மத்திய அரசசே மாகாண அரசே, அடிமேல் அடி இந்த பட்டிருப்பு மக்களுக்கா? அரசியல்வாதிகளே இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாதா, ஏழை மக்களின் உயிருக்கு உலை வைக்காதே, நோய்களோடு போராடும் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் யார்? , மருந்தாளர் இல்லாத ஆதார வைத்தியசாலை, உள்ளிட்ட பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைய ஆளணிப்பற்றாக்குறையினால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. மருந்தாளர் மற்றும் மருந்துக்கலவையாளர் இல்லாமல் நோயாளர்கள் அவஸ்த்தைப் படுகின்றனர். 6 மருந்தாளர் தேவையான இவ்வைத்தியசாலைக்கு ஒருவர் மாத்திரமே உள்ளார், 3 மருந்துக் கலவையாளர் தேவையான இவ்வைத்தியசாலைக்கு ஒருவர் மாத்திரமே உள்ளார்.
மட்டக்களப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வெளியாகிய 34 மருந்தாளர்களுக்கு அரசர்கம் அண்மையில் நியமனங்கள் வழங்கியுள்ளது, ஆனால் அந்த நியமனத்தில் கிழக்கு மாகாணத்திற்கு 19 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார்கள் அந்த 19 பேர்களுள் ஒருவரைக்கூட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கவவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்த விடையத்தில் சுகாதார திணைக்கள அதிகாரிகள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட அனைவரும் பாரபட்சம் காட்டியுள்ளார்கள்.
இந்த விடையம் குறித்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவருகக்கும் தெரியப்படுத்தியும் இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை, பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கே ஜீவகாருண்யமாக விளங்கும் இவ்வைத்தியசாலையை அதிகாரிகள் பாராமுகாகவுள்ளார்கள். எனவே உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் மருந்தாளர் ஒருவiருயேனும், மருந்துக் கலவையாளர் ஒருவரையேனும் நியமனம் செய்ய முன்வர வேண்டும். என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நலம்புரிச் சங்கத்தின செயலாளர் எஸ்.பேரின்பம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment