11 Nov 2016

தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம்

SHARE
(துறையூர் தாஸன்)

மட்டக்களப்பு தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட டெங்குவிழிப்புனர்வு ஊர்வலம் பாடசாலை அதிபர் சா.மதிசுதன் தலைமையில் வெள்ளிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆரையம்பதி பிரதேசசெயலாளர், சுகாதாரவைத்திய அலுவலர், பொதுச் சுகாதாரபரிசோதகர், பாடசாலைமாணவர்கள் ,ஆசிரியர்கள் , பாடசாலைசமூகத்தினர், நலன்விரும்பிகள் உள்ளிட்டபலர்  இவ் ஊர்வலநிகழ்வின் போதுகலந்து கொண்டனர்.

பாடசாலையில் இருந்து ஆரம்பித்த இவ்டெங்குவிழிப்புணர்வு ஊர்வலம் ஊர் வீதியூடாகச் சென்று பிரதானவீதியை அடைந்து மீண்டும் பாடசாலையைவந்தடைந்தது. இவ் ஊர்வலநிகழ்வின் போது தாழங்குடாவிநாயகர் வித்தியாலயபாடசாலைமாணவர்களின் வீதி நாடகம் ஆலயவளாக முன்றல்களிலும், மைதானவெளிகளிலும் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.

டெங்கு நமதுநாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு, சுத்தமாய் இருப்போம் சுகமாய் வாழ்வோம், டெங்குவை ஒழிப்போம் உயிர்களைகாப்போம், நுளம்புகளை அழிப்போம் நூறு வருடம் வாழ்வோம் என்ற பல்வேறு சுலோகங்களை ஏந்திக்கொண்டும் அதை உரத்துச் சொல்லியபடியும் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தனர்

நுளம்புகளால் உருவாகும் பல்வேறு நோய்கள் பற்றி அறியச் செய்துதங்களது சமூகத்தையும் தங்களது நாட்டையும் பாதுகாக்ககவேண்டும் என்ற தொணியில் மாணவர்களின் தெரு நாடகம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: