11 Nov 2016

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக கதிரவன் கலைக்கழகம் சிறந்த கழகமாகத் தெரிவு…

SHARE
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கலை இலக்கிய மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் அமைவிடங்கள் தொடர்பான நேரடி கண்காணிப்பு செயற்பாட்டில் புள்ளிகளின்
அடிப்படையில் மேலும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இந்த ஆண்டுக்கான சிறந்த கலைக்கழகங்களுள் ஒன்றாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கழகத்தின் தலைவர் த. இன்பராசா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடந்தவாரம் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தது. 
எமது கழகம் சிந்த கழகமாகத் தெரிவு செய்யப்பட்டமையை எமது ஆர்வலர்களுடன் மகிவுடன் பகிந்து கொள்வதோடு கதிரவனின் கலை இலக்கிய சமுகம் சார்ந்த சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய வழங்கும் அனைவருக்கும் இரு கரம் கூப்பி வணங்கி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு எம்மோடு இணைந்து தெரிவு செய்யப்பட்ட ஏனைய கலை மன்றங்களுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்தக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: