(துறையூர் தாஸன்)
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் நீரிழிவு நிலையம் நடாத்தும் தொற்றாநோயான உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வு நடைபவனி ஒன்றை எதிர்வரும் 16.11.2016 அன்று மேற்க்கொள்ளவுள்ளது.
வைத்தியசாலை கேட்போர் கூடத்தில், நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் நோயியல் வைத்தியநிபுணர் டாக்டர் தர்ஸினி கருப்பையாப்பிள்ளை அவர்களால், நிகழ்வின் வரவேற்புரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்றயதினம் காலை 8.30 மணிக்கு நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் ஆரம்பமாகி தாதிய உத்தியோகத்தர்களினால் ,மட்டக்களப்பு பிரதேசசெயலகத்தில் வீதி நாடகம் நடாத்தப்பட்டு மீண்டும் காந்திப் பூங்;காமணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று மீளவும் வைத்தியசாலையை வந்தடையவுள்ளது.
இந்நடைப்பயண விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு வைத்தியசாலை சமூகத்தினையும், சமூகநலன் விரும்பிகளையும் பங்குகொள்ளுமாறு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை நிருவாகம் அழைப்பு விடுக்கின்றது.
0 Comments:
Post a Comment