இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 இளைஞர்களுக்கும் அதிகமானோருக்கு இளைஞர் வதிவிட முகாம்களின் மூலம் பல்வேறு வகையான களப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ்
தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகக் கேட்டபோது திங்களன்று (நொவெம்பெர் 14, 2016) அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாகக் கூறிய அவர்@ இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இளைஞர் ஆளுமை அபிவிருத்தி வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியளித்துள்ளது.
கடந்த ஒக்ரோபெர் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் முகாமின் மூலம் இதுவரை ஆயிரம் இளைஞர் யுவதிகள் ஆளுமை விருத்திப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச இளைஞர் சம்மேளன அங்கத்தவர்கள் தலா நூறு பேருக்குப் இளைஞர் ஆளுமை விருத்திப் பயிற்சிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயினும் ஒவ்வொரு இளைஞர் சம்மேளனத்திலிருந்தும் 100 இற்கும் மேற்பட்டோர் இப்பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.
இளைஞர் வதிவிட முகாம் ஆளுமை விருத்திப் பயிற்சிகளில் செயற்திறன் மிக்க தீர்மானம் எடுத்தல், ஆக்கபூர்வமான திட்டமிடல், மென் திறன் விருத்தி, ஆளுமை விருத்தியும் ஒன்றிணைந்த பலமும், குழச் செயற்பாடு, யோகா தியானப் பயிற்சி, கலையும் கலாசாரமும், தீப்பாசறை உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம் இளைஞர் யுவதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் நொவெம்பெர் மாத இறுதிக்குள் சுமார் 500 பேருக்கு இளைஞர் வதிவிட முகாமின் மூலம் இளைஞர் அபிவிருத்தி ஆளுமைப் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நாடளாவிய ரீதியில் 33 ஆயிரத்து 400 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் நாடு பூராகவுமுள்ள 334 பிரதேச செயலகப் பிரிவுகளில் இளைஞர் வதிவிட முகாம் ஆளுமை விருத்திப் பயிற்சியை நிறைவு செய்துள்ளார்கள்.
0 Comments:
Post a Comment