2017 ஆம் அண்டுக்கான இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் மட்டக்கள்பபு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் எதிர்வரும் 19.12.2016 அன்று நடைபெறவுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சி.அருளானந்தம் திங்கட் கிழமை (14) தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 1987.08.31 ஆம் திகதி தொடக்கம் 2003.08.31 ஆம் திகத்திக்குள் பிறந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் தேர்தல் கேட்பவர்கள் 1998.08.31 ஆம் திகதி தொடக்கம் 1989.08.31 ஆம் திகதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்தலுக்கான நொமினேசனை 02.12.2016 அன்று வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தில் தாக்கல் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் 03.12.2016 தொடக்கம் 16.12.2016 வரை நடைபெறும். தேர்தல் வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திலும், மட்.பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலுமாக இரண்டு இடங்களில் மாத்திரம், 19.12.2016 அன்று காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும். இப்பிரதேசத்திலிருந்து 1663 இளைஞர் யுவதிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், பட்டிருப்புத் தொகுதியிலிருந்து ஒருவர் மாத்திரமே தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அன்றய தினம் நாட்டிலுள்ள 334 பிரிவுகளிலும் இத்தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்த தக்கதாகும்.
0 Comments:
Post a Comment