1 Nov 2016

சிறுவனின் உயிரைப் பறித்த புறா - மட்டு திக்கோடையில் சம்பவம்

SHARE
மட்டக்களப்பு தும்பங்கேணி இளஞர் விவசாயத் திட்ட பிரதேசத்தில் வசிக்கும் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன் என்பவர் பரிதாபகரமாக இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று (01.11.2016) காலை 7.00 மணியளவில் இச் சிறுவன் தன் வீட்டின் மலசல கூடத்திற்கு மேல் பகுதியில் தான் வளர்ந்து வந்த ஒரு சோடி புறா கூட்டினுள் புறாவிற்கு தீன் வைப்பதற்காக ஏறமுயன்ற வேளையில் வழுக்கி  விழுந்து உயிரிழந்துள்ளார்.


இச் சிறுவன் வீட்டில் தன் பொழுது போக்குக்காக வளர்ந்த இரு புறாக்களுக்கு உணவு வைக்க முயன்ற வேளையில் உயிரிழந்துள்ளமை பரிதாபகரமான சம்பவமாகும்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த இச் சிறுவன் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஒரேய ஒரு ஆண்பிள்ளை என்பதுடன் இவருடைய தந்தை  கூலித்தொழிலில் ஈடுபட்டு  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வழுக்கி விழுந்த சிறுவன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் வழியில் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்த சிறுவனுடைய சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: