1 Nov 2016

தேற்றாத்தீவு – குடியிருப்புக்கு புதிய மயானம் அமைக்க திட்டம்.

SHARE
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவில் உள்ள குடியிருப்பு கிராமத்தில் மயானம் இன்மையினால் அப்பகுதி மக்கள் சிரமப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரம் கோவிந்தன் (ஜனா) அவர்களின் கவனத்திற்கு கொண்வரபட்டதற்கமைவாக குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரியவரவதாவது,
தேற்றாத்தீவு குடியிருப்பு பகுதியில் 40 குடும்பங்கள் பல காலங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் இவர்களினுடைய சடலங்களை அப்பகுதியில் உள்ள குளக்கட்டுகளில் புதைப்பதாகவும், சடலங்களை மூன்று கிலொ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்வதாகவும் கவலை தெரிவித்தனர்.   இவர்களுக்கான சேமக்காலை இவர்களுடைய பிரதேசத்தில் இன்மையால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தமையை இட்டு  நேற்று (31) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா அவர்கள் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரையும் அப்பகுதிக்கு அழைத்துச் சென்று நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதன் பிரகாரம் அப்பகுதியில் உள்ள அரச காணிகளை பார்வையிட்ட பின்னர் மிகவும் விரைவாக இவர்களுக்கான சேமக்காலை அமைத்து தருவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 






SHARE

Author: verified_user

0 Comments: