இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தி வைபவத்திற்காக மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இலங்கையின் 34 வது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய
சுந்தர பங்கேற்றார்.
செவ்வாய்க்கிழமை (01) காலை பொழுது புலரும்போது மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கு கொண்டார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் முன்னர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு மட்டக்களப்பில் பணியாற்றியவர். “கிறீஸ் பேய்” உலாவிய காலத்தில் நிலைமையக் கட்டுப்படுத்த அவர் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இலங்கையில் முறையான பொலிஸ் சேவை 1866 ஆம் ஆண்டின் செப்ரெம்பெர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது நாட்டில் 47 பொலிஸ் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், 585 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையாற்றினர். முதலாவது பொலிஸ் மாஅதிபராக வில்லியம் ரொபர்ட் கெம்பெல் நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய பொலிஸ் மாஅதிபரின் கீழ், சகல தரங்களையும் சேர்த்து 84,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் உள்ளார்கள்.
0 Comments:
Post a Comment