அரசியசிலில் நல்லதைப் பேச வேண்டும் உண்மையைப் பேச வேண்டும் உத்தமனாக பேச வேண்டும் வாக்குப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றி எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யக் கூடாது - கிருஸ்ணப்பிள்ளை.
தமிழ் மக்களுக்காக உயிரையும் தியாகம் பண்ணுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் தான் கிழக்கு மாகாண சபையில் இருக்கிறார்கள் -
நான் அகில அலங்கை தமிழ்காங்கிரசில் கடந்த 2000 ஆம் ஆண்டு போட்டியிட்டு 8800 அளவிலான வாக்குகளை எனது கட்சிக்காக பெற்றிருந்தேன் அந்த வகையில் அதே நேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 534 வாக்குகள் தான் அந்த கட்சிக்கு தேவையாக இருந்தது அந்த அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் என்ற ரீதியில் நாங்கள் போட்யிடாவிட்டிருந்தால் நான் நேரடியாக கூறியிருந்தேன் தம்பி கணேசமூர்த்தி அவர்களிடம் நீங்கள் என்னால் தான் பாராளுமன்றம் பார்த்தீர்கள் என்று ஏன் இதனை நான் கூறுகின்றேன் என்றால் பொய் வாக்குறிதிகளை அளிக்காமல் அரசியசிலில் நல்லதைப் பேச வேண்டும் உண்மையைப் பேச வேண்டும் உத்தமனாக பேச வேண்டும் ஆனால் வாக்குப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுவதும் மக்கள் செல்வாக்கு பெறுவதையும் எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் பரவாயில்லை நானாக இருந்தாலும் பரவாயில்லை மக்களை ஏமாற்றி பிழை செய்கின்ற அரசியல் செய்யக் கூடாது என்பதனை திட்டவட்டமாக கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை.
களுதாவளை சுயம்பிலிங்க பிள்ளையார் ஆலயமும் களுதாவளை கனடி விளையாட்டுக் கழகமும் பொது மக்களின் ஆதரவுடன் இணைந்து நடந்திய தேசிய மட்ட சாதனையாளர் பாராட்டுவிழா சனிக்கிழமை (29) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் களுதாவளை சுயம்பிலிங்க பிள்ளையார் ஆலய தலைவர் கா.வ.வேலாயுதப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது இவ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் கலந்த கொண்டு கருத்து தெரிவித்த வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளுமான கணேசமூர்த்தி அவர்களின் செயலாளர் தேசகீர்த்தி சாமசிறி சிறிஸ்குமார்… களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்த கருத்தை
நிராகரித்துவிட்டு உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை. இவ்வாறு குறிப்பிட்டார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் களுதாவளை மகாவித்தியாலத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவது தொடர்பில் இது வரை எந்த விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடையம் தொடர்பில் பல தடவை களுதாவளை மகாவித்தியாலத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்
டுள்ளது.
அபிவிருத்தி செய்வதில்லை ஒன்றும் செய்வதில்லை என்று பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிக்கின்றார்கள்.
கிறிஸ் மனிதன் வந்த வேளையில், பூத மனிதன் வந்த வேளையில் வெள்ளை வேன் வந்த வேளையில் சிவப்பு வேன் வந்த வேளையில் , கறுப்பு வேன் வந்து கடத்திச் சென்ற வேளையில், ஏன் எமது இளஞர் யுவதிகளை மானபங்கப்படுத்திய போது யாரால் குரல் கொடுக்க முடிந்தது. இந்த ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு பின்னால் திரிந்த அரசியல்வாதிகளுக்கு மக்களுக்காக குரல் கொடுக்க முடிந்ததா? அந்த அபிவிருத்தி செய்கின்ற ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு வக்காளத்து பாடுகின்றவர்களைக் கேட்க விரும்புகிறேன் .
தமிழ் மக்களுக்காக நாங்கள் அன்றும் குரல் கொடுத்தோம் இன்றும் குரல் கொடுக்கிறோம் என்றும் கொடுப்போம். தமிழ் மக்களுக்காக எங்களது உயிர்களையும் தியாகம் பண்ணுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் தான் பலர் இன்றும் எமது கிழக்கு மாகாண சபையில் இருக்கிறார்கள் என்பதனையும் நினைவு படுத்திக் கொள்ள விரும்பு
கின்றேன்.
தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த எமது மாணவர்களை தமிழ்தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துவதோடு அவர்களுக்கான ஒத்துழைப்புகளையும் என்றும் வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment