1 Nov 2016

வன ரோபா மரம் நடுகை வேலைத்திட்டம்

SHARE
(இ.சுதா) 

வன ரோபா மரம் நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் வன பரிபாலன சபை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நிழல் தரும் மரங்கள் நடும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை 01) பட்டிருப்பு கல்வி
வலயத்திற்கு உட்பட்ட பெரியகல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது பெறுமதியான பல பயன்பரும் மரக் கன்றுகள் பாடசாலை வளாகத்தினுள் அதிகாரிகளினாலும் மாணவர்களினாலும் நடப்பட்டன.

விதியாலய அதிபர் எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலன திணைக்களத்தின் வட்ட வன அதிகாரி  கே.ஜெயக்குமார் மற்றும் வன பரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் இமாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: