
காத்தான்குடியிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஏறாவூர் நகரில் பிரதான வீதிக்குக் குறுக்கே சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் காரரால் மோதப்பட்டு பலத்த அடிபட்டு வீதியில் விழுந்தனர்.
ஹோட்டல் உரிமையாளரான பாவா லேன், காத்தான்குடி 6 ஐச் சேர்ந்த ஆதம்லெப்பை முஹம்மது ஷாஜஹான் (வயது 39) என்பவரும், சென்றல் வீதி முதலாம் குறுக்கு புதிய காத்தான்குடியைச் சேர்ந்த எம். முஹம்மது ஷயீட் (வயது 38) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
முறையற்ற விதத்தில் பிரதான வீதிக்குக் குறுக்கே மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாகக் சந்தேகிக்கப்படும் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன.
0 Comments:
Post a Comment