15 Nov 2016

வீதி விபத்தில் சிக்கிய வயோதிபத் தம்பதினரில் கணவன் பலி

SHARE
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் கிரான் எனுமிடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய வயோதிபத் தம்பதியினரில் கணவன் இறந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது@ தங்களது பேரப்பிள்ளையின் பூப்படைவு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கோராவெளி எனும் கிராமத்திலிருந்து கோரகல்லிமடுவுக்கு சைக்கிளில் இருவருமாக வந்து கொண்டிருந்தபோது படி ரக வாகனமொன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், சற்று நேரத்தில் கணவன் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சைக்கிளைச் செலுத்தி வந்த எஸ். கந்தையா (வயது 72) என்பவரே மரணித்துள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான அவரது மனைவி சந்திரசேகரி தங்கமணி (வயது 68) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: