(எச்.ஏ.ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்தாண்டு 1000 வீடுகளைப் பயனாளிக் குடும்பங்களுக்கு அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறேஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்தார்.
அடுத்தாண்டுக்குரிய வீட்டுத் திட்டம் பற்றிக் கூறும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி ஏறாவூர்ப் பற்று, வவுணதீவு, கிரான், பட்டிப்பளை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 150 வீடுகள் என்ற அடிப்படையில் 600 வீடுகளும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 300 வீடுகளும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 100 வீடுகளுமாக மொத்தம் ஆயிரம் வீடுகள் மீள் குடியேற்ற அமைச்சின் உதவியுடன் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்படவுள்ளன.
0 Comments:
Post a Comment