மட்டக்களப்பு மெதடிஸ்த. மத்திய கல்லூரியின்
1998ம் வருட மாணவர்களினால் ஒ ழுங்கு செய்யப்பட்ட புலைமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவடிவேம்பு பிரதேச வைத்திய அதிகாரி நவரெட்ணம் மௌலீசன்,பிரதியதிபர் இ.பாஸ்கர்,ஆசிரியர்களான எஸ்.சிற்சபேசன்,திருமதி ரேணுகா மனோரஞ்சன்,முருகேசு புவனேந்திரகுமார்,
ஏ.ஆர்.எம்.நபீல் பழைய மாணவரட் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின்உப சயலாளர் துசேந்திரா விமலநாதன் 1998ம் வருடமாணவர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள், கலந்துகொண்டனர்.இதன்போது 28மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் வெற்றிக்கேடயங்கள்,ஞாபகார்த்த பரிசில்கள் 1998ம் வருடமாணவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.இவ்மாணவ அமைப்பினர்கள் கூட்டுப்பொறுப்புடனும்,அர்ப்பணிப்புடனும் ஒருமித்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கும்,மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வளர்ச்சிக்காகவும் பல வேலைகளை முன்னேடுத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.அந்தவகையில் பந்துவீசும் இயந்திரம்,கல்லூரியின் 202வது நிறைவையொட்டி 202பிளாஸ்ரிக்கதிரைகள்,கடினப்பந்து விளையாடுவதற்கான தளவிரிப்பு,என்பன 1998ம் வருட மாணவர்களினால் இப்பாடசாலைக்காக சமூகசிந்தனையுடன் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment