13 Nov 2016

ஏறாவூரில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு பரோபகாரியின் உதவியால் பாடசாலைக் கட்டிடம்

SHARE
ஏறாவூரில் விஷேட தேவையுடைய மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைக் கட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விஷேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளான இருபத்தைந்து மாணவர்களுக்கு இப்பாடசாலைக் கட்டிடம் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிரந்தரக் கட்டிடம் இ;ன்மையினால் ஐயங்கேணி - ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தின் ஒருபகுதியில் இதுகாலவரை இந்த விஷேட தேவையுடைய மாணவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தார்கள்.  

கொழும்பிலுள்ள நலன்விரும்பியான  சட்டத்தரணி முஹம்மது ஹபிஸ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக தனியானதொரு பாடசாலைக் கட்டிடத்துக்கு அவர் நிதியளிப்புச் செய்திருந்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாரக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏஎல்எம். சரீப் தலைமையில் நடைபெற்ற  இக்கட்டிட திறப்பு விழாவில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான என். சிதம்பரமூர்த்தி எம்ரீஎம். அஷ்ரப் பொறியியலாளர் எம். காலிதீன் கொழும்பிலுள்ள தனவந்தரான சட்டத்தரணி முஹம்மது ஹபிஸ் அவரது  (பெற்றார்) முஹம்மது ஹில்மி செயினுதீன் மற்றும்  பாத்திமா ஷாஹ்ஷதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: