13 Nov 2016

கிழக்கு மாகாணத்தில் நலிவடைந்துள்ள கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்ய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. கனகசுந்தரம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் நலிவடைந்துள்ள கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்ய மாகாண சபை நடவடிக்கை எடுத்துச் செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. கனகசுந்தரம் தெரிவித்தார்.
ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கூட்டுறவும் நோக்கமும், விழிப்புணர்வு செயல் திட்டம் பற்றிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (நொவெம்பெர் 13, 2016) இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஏறாவூர் வலய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கங்கள், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர், தெங்கு உற்பத்தி கூட்டுறவுச் சங்கத்தினர், சிக்கன கடன் உதவிக் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கனகசுந்தரம்@ கூட்டுறவு என்பது இன மத மொழி பேதங்களைக் கடந்த மக்களுடைய இயக்கம், வரலாற்றில் கூட்டுறவு இயக்கம் மாத்திரமே சுரண்டலற்ற இயக்கமாக நிலநாட்டப்பட்டது. 
அங்கத்தவர்களின் சமூக பொருளாதார, வளர்ச்சியில் பங்கு கொள்ளக் கூடிய இயக்கமாகவும் அது உள்ளது. 

ஆயினும், சமீபகால யுத்தம் மற்றும் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் பின்னடைவு கண்டுள்ள கூட்டுறவுத் துறையை சீரமைத்து அதனை முன்மாதிரியான அபிவிருத்திப் பாதையில் கொண்டு செலுத்தும் முயற்சியில் கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சு ஈடுபட்டுள்ளது.

அதன் காரணமாக இப்பொழுது மக்களை விழிப்பூட்டுவதற்காக கூட்டுறவும் நோக்கமும் பற்றிய இவ்வாறான பல விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாகாணம் முழுக்க இடம்பெற்று வருகின்றன.” என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 500 இற்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுவுறச்  சங்கங்களில் சுமார் 400 சங்கங்களே இயங்கி வருகின்றன.
இந்நிகழ்வில் கூட்டுறவு பற்றிய விளக்கம், அதன் நன்மை என்பனவும் கூட்டுறவு பற்றி சமூகத்தில் பொருளாதார அபிவிருத்தி செய்ய, தனி நபர் கூட்டுறவுத் துறையில் இணைவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வழி முறைகள், கூட்டுறவு தொடர்பான அரச திட்டங்கள், 2017வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விபரங்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

திணைக்கள தலைமைக் காரியாலய உத்தியோகத்தர் கே. வேல்வேந்தன், ஏறாவூர் வலய பொறுப்பதிகாரி எஸ்.எல். அப்துல் காதர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. விபுலானந்தராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: