11 Nov 2016

பல சவால்களுக்கு மத்தியில் துறைநீலாவணைக் கிராமத்தைமாதிரிக் கிராமமாக உருவாக்குவதற்கு தெரிவு செய்துள்ளோம் - மூ.கோபாலரெத்தினம்.

SHARE
(துறையூர் தாஸன்)

மூகவலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கிராமிய அபிவிருத்திப் பிரிவின் ஊடாக ஒரு பிரதேசசெயலகப் பிரிவுக்கு ,ஒரு கிராமத்தை சமூகப் பொருளாதார கலை கலாசார ஆன்மீகமற்றும் சுற்றாடல் ரீதியாக வளர்ச்சியடைந்த ஒருமாதிரிக் கிராமமாக கொண்டுவருவதற்கு பல சவால்களுக்கு
மத்தியில் துறைநீலாவணைக் கிராமத்தை தெரிவுசெய்துள்ளோம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கேபாலரெத்தினம் தெரிவித்தார்.

சமூகவலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கிராமிய அபிவிருத்திப் பிரிவின் ஊடாக ஒரு பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒருமாதிரிக் கிராம வேலைத்திட்டத்திற்கான கூட்டமர்வு மட் துறைநீலாவணை தெற்கு பலநோக்கு மண்டபத்தில் கல்லாறு சமுர்த்திமுகாமையாளர் பூ.தவேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (11) மாலை நடைபெற்றது.

மண்முனைதென் எருவில் பற்றுபிரதேச செயலகசெயலாளர் மூ.கோபாலரெத்தினம் இந்நிகழ்வில் முதன்மை அதிதியாககவும் சமுர்த்தி முகாமைத்தவப் பணிப்பாளர்; வே.வரதராஜன், உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிடுகையில்…


சமூகவலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கிராமிய அபிவிருத்திப் பிரிவின் ஊடாக ஒரு பிரதேசசெயலகப் பிரிவுக்கு ,ஒரு கிராமத்தை சமூகப் பொருளாதார கலை கலாசார ஆன்மீகமற்றும் சுற்றாடல் ரீதியாக வளர்ச்சியடைந்த ஒருமாதிரிக் கிராமமாக கொண்டுவருவதற்கு பல சவால்களுக்கு மத்தியில் துறைநீலாவணைக் கிராமத்தை தெரிவுசெய்துள்ளோம்.

அரச மற்றும் அரசசார் பற்றஅமைப்புக்கள் , வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏனைய பிரிவுகள் ஊடாக செயற்படுத்தப்படும் வேலைத் திட்டங்களை துறைநீலாவணை தெற்கு மாதிரிக் கிராமத்திற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுத்துவதுடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களம், முதியோர் செயலகம், விவசாயத் திணைக்களம், பாதுகாப்புத் தொடர்பான நிறுவனங்கள் ஊடாகவுமே மாதிரிக் கிராம வேலைத்திட்டம் நடைபெறும்.

மேலும் துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள பிள்ளைகள் வாழ்வதற்கு மிகச்சிறந்த போதையற்ற வசதி நிறைந்த சூழலை மக்கள் பங்கேற்புடனே உருவாக்குவதே புதிய மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டமிடலின் நோக்கம்  இதற்கு முற்று முழுதாக மக்களின் பங்களிப்புமிகவும் முக்கியமாகும் முன்னுரிமை அடிப்படையில் அடிப்படை வசதிகளற்றவர்களுக்கு அவ்வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பது இத்திட்டத்தின் பலநோக்கங்களுள் ஒன்றாகும். என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டமர்வின்போது பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் தேவைப்பாடுகளை, செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் போன்றன பற்றியும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: