18 Nov 2016

நாங்கள் மாடுகளை மேய்ப்பதற்கு இடங்களைத் தோடிச் சென்றால் நாங்கள் இருக்கும் இடங்களில் புத்த விகார அமைப்பதற்கும்இ வருகின்றார்கள் - நடராசா

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் தரைப் பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமாகவுள்ளன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்;பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இதற்குரிய தீர்வை நோக்கிச் செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் மாடுகளை மேய்ப்பதற்கு இடங்களைத் தேடிச் சென்றால் நாங்கள் இருக்கும் இடங்களில் புத்த விகார  அமைப்பதற்கும், புத்தர் சிலை வைப்பதற்கும் வருகின்றார்கள்.
என கிழக்கு மகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச 100 கால்நடை பண்ணையாளர்களுக்கு உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் இலவசமாக பால் கொள்கலன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் வியாழக்கிழமை (17) மாலை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

காவியுடை அணிந்து கொண்டு புத்தரின் போதனையை மக்களுக்குப் பரப்ப வேண்டிய புத்த பிக்குகளுள் ஒரு சிலர் மதம் பிடித்துக் கொண்டு பிக்கு என்று சொல்வதற்கே அருகதையில்லாமல் தமிழ் மக்களின் காணியை அத்துமீறீப் பிடிப்பதற்குச் சண்டித்தனர் காட்டித்திருகின்றார்கள்.

சுதந்திரமாக மாடுகள் மேய்ப்பவர்களைக்கூட பிடித்து அடைத்து அவர்கiளுக்குத் தண்டனை வழங்குகின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புத்த பிக்குவின் அடாவடித்தனங்கள், மேச்சல்தரைப் பிரச்சனைகள் உள்ளிட்ட இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் எமது தலைவர்; இரா.சம்மந்தன் அவர்கள் ஜானதிபதியுடனும், பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு போராடி வருகின்றார். ஆகவே நாம் இன்னும் சோதனைகளுடன்தான் வர்கின்றோம் அதற்காக நாம் சேர்ந்த போகவோ எமது கால்நடைகளை விற்றுவிடவோ, விகாரைகளை அமைக்கவோ விடமுடியாது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், அவற்றுக்கு எம்மை ஆக்கிக் கொண்டவர்களாக நாம் மாறவேண்டும்.

பொரும்பான்மை மக்களை இங்கு குடியேற்றும் திட்டங்கள் அரசாதங்கத்திடம் இல்லவிட்டாலும் இவ்வாறான பிக்குகளினூடாக சில சம்பவங்கள் அரங்கேறுவதற்கான சில சம்மபவங்கள்கூட இடம்பெற்றிருக்கின்றன. பிக்கு என்றால் மரியாதைக்குரியவர் ஆனால் மட்டக்களப்பிலுள்ள அடாவடித்தனங் கொண்ட பிக்குவை பிக்கு என்று சொல்வதற்கு நா கூசுகின்றது.

நாம் அரசமரத்துப் பிள்ளையார் என சொல்கின்றோம் ஆனால் அவர் அரச மரத்தைக் காண்டால் புத்தர் சிலை வைக்கின்றான். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியிலும் எதிர்காலத்தில் இடம்பெறலாம். அவ்வாறெனின் மக்கள் உடனுக்குடன் எமக்கு தகவல்களை அறிவிக்க வேண்டும்.என அவர் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: