வன்முறைகளில் அல்லது தீய வழிகளில் அரசியலை நடாத்த நினைத்தால் அதே அவர்களை அழித்துவிடும். நாம் நடாத்திய 60 வருடகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு தற்போது அரசியல் செய்ய வேண்டியுள்ள காலமாகவுள்ளது.
எனவே தப்போது உணர்ச்சிவசப்படுவதோ, ஆயுதம் ஏந்திப் போராவிடுவதோ உகந்ததல்ல. சாத்வீனமான முறையில் மூளையை நன்கு பாவித்து செயற்பட வேண்டும்.
என கிழக்கு மகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச 100 கால்நடை பண்ணையாளர்களுக்கு உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் இலவசமாக பால் கொள்கலன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் வியாழக்கிழமை (17) மாலை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
கடந்த காலங்களில் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஆதாரம் வழங்கும் வகையில் பல சர்வதேச அமைப்புக்கள் உதவி வந்தன ஆனால் இவ்விடையத்தில் ஏற்பட்ட வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த கையோடு மகிந்த ராஜபக்ஸ அவ்வாறு உதவி செய்து வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையெல்லாம் நாட்டை விட்டு வெளியேற்றினார்.
போர் ஓன்று தவிர்க்க முடியாமல் நடைபெறுமாயின் சர்வதேச அமைப்புக்களின் கண்காணிப்பிலே அப்போர் நடைபெற வேண்டும் ஆனால் நம்நாட்டிலே சர்வதேச அமைப்புக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டுத்தான் மகிந்த ராஜப்க்ஸ நந்திக்கடலிலே எமது மக்களைக் கொன்று தள்ளினார். எனவே சர்வதேச நிறுவனங்களின் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
எமது எல்லைக் காவலர்கள் கால்நடைப் பண்ணையார்கள்தான் எல்லையில் அணைபோன்று பாதுகாப்பளித்த வண்ணம் எமது கால்நடைப் பண்ணையாளர்கள் உள்ளார்கள் அவர்கள் இல்லையென்றால் எமது பகுதிக்குள் பல ஊடுருவல்கள் நடைபெற்றிருக்கும். சின்னமாதவனை, பெரியமாதவனை, நெளிகள் அகிய எல்லைப் பகுதிகளில் அத்துமீறிய பயிர்செய்கையாளர்களின் வரவு தற்போது எமது செயற்பாடுகளால் குறைக்கப் பட்டுள்ளன.
தற்போது காணப்படுகின்றது இந்நிலமையை நாம் எவ்வாறு தொடரச் செய்வது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும், எமது பிள்ளைகள் பலரை இழந்து விட்டோம் கோடான கோடி சொத்துக்கழை எல்லா இழந்து விட்டோம். எனவே அரசியல் பிரச்சனையில் ஓர் தீர்வைக் கண்டால்தான் எமது பிள்ளைகள் இனிமேல் சமாதானமாக வாழ முடியும். மிகவும் நிதானமாகவும், பக்குவமாகவும் எமது அரசியலை நகர்த்த வேண்டும் என எமது தலைமை சொல்கின்றது. இப்போது அறிவால் செய்கின்ற அரசியல் உணர்வால் செய்கின்ற அரசியல் அல்ல. பலர் எம்மை உசுப்பேற்றப் பார்க்கின்றார்கள்.
வன்முறைகளில் அல்லது தீய வழிகளில் அரசியலை நடாத்த நினைத்தால் அதே அவர்களை அழித்துவிடும். நாம் நடாத்திய 60 வருடகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு தற்போது அரசியல் செய்ய வேண்டியுள்ள காலமாகவுள்ளது. எனவே தப்போது உணர்ச்சிவசப்படுவதோ, ஆயுதம் ஏந்திப் போராவிடுவதோ உகந்ததல்ல. சாத்வீனமான முறையில் மூளையை நன்கு பாவித்து செயற்பட வேண்டும்.
முன்னர் எமக்கு அதிகாரம் இல்லை அவ்வேளையில் பிரச்சனைகளை அடையாளப்பத்துவது மாதிரமாகத்தான் எமது வேலையாக இருந்தது. தற்போது அதிகாரத்திற்குப் பக்கத்தில் நிற்கின்றோம். ஆனால் தற்போது நாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
டிசம்பர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரெத்தின தேரருக்கு எதிராக நீதிமன்றில் பொலிசார் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். இதனை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உறுதிப்படுத்தியுள்ளார். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment