18 Nov 2016

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து 2 மாடுகள் உயிரிழப்பு. 3 மாடுகளுக்கு பலத்த காயம்

SHARE
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஓந்தச்சிமடம் எனும் இடத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் 2 மாடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரவதாவது…

கட்டுநாயாக்காவிலிருந்த கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டொல்பின் ரக வாகனம் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஓந்தச்சிமடம் எனும் இடத்தில் வீதியில் நின்ற மாடுகளின் மீது மோதியதாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இதில் இஸ்த்தலத்தில் 2 மாடுகள் உயிழந்துள்ளதுடன் மேலும் 3 மாடுகள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குடப்பட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இரவு மற்றும் பகல் வேளைகளிலும் கட்டாக்காலி மாடுகள் திரிவதனால் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன. தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதனால் கட்டாகாகலியாகத்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என பிரயாணிகளும். பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: