3 Nov 2016

அகழப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் உள்ள வீடமைப்புப் பகுதியை மேலும் ஆய்வு செய்வதற்காக பாதுகாக்கவும் எச்சங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவு

SHARE
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ள வளவொன்றில் வீடமைப்புப் பணிகள் இடம்பெற்றபோது எலும்பு எச்சங்கள்
அகழப்பட்ட இடத்திற்கு செவ்வாய்க்கிழமை நீதிபதி மற்றும் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.

தோண்டப்பட்ட குழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் வீடமைப்புப் பணிகள் இடம்பெறும் அந்தப் பகுதியை மேலும் ஆய்வுக்குட்படுத்துவதற்காக பாதுகாக்குமாறும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம். றிஷ்வி (யுனனவைழையெட ஆயபளைவசயவந யனெ யுனனவைழையெட னுளைவசiஉவ துரனபந ஆஐஆ. சுணைஎi) மற்றும் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி (ஊழளெரடவயவெ துரனiஉயைட ஆநனiஉயட ழுககiஉநச) சாலக பெரேரா ஆகியோர் முன்னிலையில் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களும் அவை அகழப்பட்ட இடமும் பரிசோதிக்கப்பட்டன.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இந்த இராணுவ முகாம் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தின் பெரும்பாலான காணிகளையும் பொது மக்களின் குடிமனைகளையும் அரசாங்கப் பாடசாலையையும் கைப்பற்றயிருந்த படையினர் 2014 ஆம் ஆண்டு அவர்கள் கைப்பற்றியிருந்த காணிகளில் ஒரு சில பொதுமக்களின் காணிகளை மீளவும் ஒப்படைத்து  பாதுகாப்பு வலயத்தை சுருக்கிக் கொண்டனர்.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் பாலிப்போடி உதயகுமார் (வயது 50) எனும் பாடசாலை அதிபர் ஒருவர் தனக்குச் சொந்தமான காணியில் கடந்த மூன்று மாதங்களாக வீடொன்றை அமைத்து வரும் வேளையில் அவ்வீட்டோடு இணைந்ததாக மலசல கூடத்தை அமைக்கும் போது அந்த இடத்தில் எலும்பு மச்சங்களும் டயர் மற்றும் புகையிரத சிலிப்பர் கட்டைகளை எரித்த கரிகளும் தென்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த விடயம் ஏறாவூர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். 
மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நீதிபதி முன்னிலையில் பரிசோதனைகள் இடம்பெற்றபோது வீடமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த மேசன் தொழிலாளிகளும் சாட்சியமளித்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: