கல்முனை நகரிலிருந்து அம்பாறை நகருக்கு மாற்றப்படவிருந்த தேசிய கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை அலுவலக (NAITA) இடமாற்றம் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@
கல்முனையிலிருந்து இதுவரைகாலமும் இயங்கிவந்த தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, (Nயுஐவுயு) காரியாலயம் அம்பாறைக்கு இடம்மாற்றபடுவதை உடனடியாக நிறுத்துமாறு மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்த வேண்டுகோளை வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் தொழிநுட்ப கல்வி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஏற்றுகொண்டு இந்த இடமாற்றத்தை நிறுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை (நொவெம்பெர் 10, 2016) ஹிஸ்புல்லாஹ்வுக்கும், மஹிந்த சமரசிங்ஹவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
தொழில் வாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தமது வாழ்க்கை தொழிலுக்காக பல சேவைகளை செயற்படுத்திவந்த ஒரு நிறுவனம் தூர இடம்மொன்றுக்கு இடம் மாற்றம் செய்யப்படுவதனால் ஏற்படும் அசொளகரியங்கள் மற்றும் இத் தொழிற்கல்வியின்பால் இளைஞர் யுவதிகளை தூரமாக்கிவிடும்.
இந்த அலுவலக இடமாற்றத்தை நிறுத்த வேண்டும் என பலரும் என்னிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இப் பிராந்திய காரியாலயத்தை இடம்மாற்றுவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என நான் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக அலுவலக இடமாற்றத்தை நிறுத்துமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்” என்றார்.
0 Comments:
Post a Comment