(டிலா )
சாய்ந்தமருதை சேர்ந்த சபீக்கின் மகன் (வயது 11) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (AMH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுமார் ஆறு நாட்கள் கடத்தி சிறுவன் இரத்த வாந்தி எடுக்கும் வரை எவ்வித உரிய சிகிச்சையின்றி காணப்பட்டனர்.
சிறுவனின் பெற்றோர்கள் அலர தொடங்கபோதெல்லாம் இவர்களுடைய பதிலாக "சீப் டாக்டர் லீவில் போயிருக்கிறார், அவர் வரட்டும் வந்தால்தான் நீங்கள் சொல்வது போல் நடக்கும்" என்று கூறியுள்ளார்கள் AMH வைத்திய அதிகாரிகள்.
இரத்த வாந்தியை பார்த்த பெற்றோர்களின் அலரல் சப்தத்தை அறிந்த வைத்தியர்கள் மட்டக்களப்பு அரச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
சுமார் 4 நாட்களுக்கு முன்னராக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் இது "டெங்கு காய்ச்சல்" என்றும் இதற்கான அவசர உதவியை ஏன் AMH வைத்தியசாலை செய்யவில்லை என்றும் அலட்டினர். இனி உங்கள் குழந்தையை 25% காப்பாற்ற முடியும் என மட்டக்களப்பு வைத்தியர்கள் கூறினார்கள். சிகிச்சை பலனின்றி சற்று நேரத்தில் உயிரிழந்தார்.
மகனின் பரிதாபத்தையும், நோயினால் படுகின்ற அவதியையும் கண்முன்னே கண்ட பெற்றோர் சரிந்து விழுந்தேவிட்டார்கள். கல்முனை AMH வைத்திய அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் கூறிய போது "எனது குழந்தைக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் ஏற்படக்கூடாது" என்பதற்காக முழுமையாக எனது ஒத்துழைப்பை வழங்குகிறேன் என குறித்த அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இது போன்ற நிகழ்வுகள் புதிது கிடையாது. அவ்வப்போது அண்மைக் காலங்களாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. பிரசவ அறைக்குள் தாய்மார்களுக்கு தூசனத்தால் ஏசுவது, அனுபவமற்ற வைத்தியர்களைக்கொண்டு பிரசவ முறை பார்க்கப்படுவதால் சில தாய்மார்கள் உயிரிழந்தும், சில நாட்களுக்கு முன்பாக கூட குறித்த வைத்தியசாலையில் ஒரு தாயும் பிள்ளையும் இறந்த செய்தியையும் காணக்கூடியதாக உள்ளது.
இதனை ஆராய்ந்து குறிப்பிட்ட வைத்தியசாலைக்கெதிராகவும், அதிகாரிகளுக்கெதிராகவும் தக்க நடவடிக்கை எடுக்கும்வரை ஓய்வதில்லை என்னும் முடிவு பெருமளவு வட்டங்களால் எடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது.
இச்சிறுவனின் மரணத்திற்கான காரணம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிய சிகிச்சை வழங்கப்படாமையே என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment