13 Nov 2016

மேச்சல் தரைகளைக் கூறுபோட்டு சிங்கள மக்களுக்கு வழங்க புத்த பிக்கு எடுக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். – சிவபாதம்.

SHARE
மேச்சல்தரைப் பகுதிகளைக் கூறுபோட்டு அம்பாறை மாவட்ட சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்து வேண்டும் என என்ற புத்த பிக்குவின் கோரிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடைவரச்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் இற்றைக்கு 50 வருடங்களுக்கு மேலாக  எல்லைப் பகுதியிலுள்ள மேச்சல்தரைப் பகுதியில் கால்நடைகளை வளர்த்து தமது ஜீவநோபாயத்தை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் மேச்சல்தரைப் பகுதிகளைக் கூறுபோட்டு அம்பாறை மாவட்ட சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்க வேண்டும்  எனக்கோரி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமணரெத்தின அம்பிட்டி தேரர் தலைமையில் அம்பாறை – கண்டி வீதியை மறித்து வெள்ளிக்கிழமை (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ்விடையம் குறித்து  ஞாயிற்றுக் கிழமை (13) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் குறித்தி அவர் மேலும் தெரிவிக்கையில்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று மற்றும்,  பட்டிப்பளைப் பகுதியிலுள்ள கால்நடைவளர்ப்பாளர்கள் இற்றைக்கு 50 வருடங்களுக்குமேலாக மாவட்டத்தின் எல்லைப் பகுதியான திவுலானை, கெவுளியாமடு, கச்சக்கொடிச்சுவாமலை, மணலேத்ததம், மற்றும் திவுலானை, போன்ற எல்லைக் கிராமங்களில்தான் பெரும்போக வேளாண்மைச் செய்கை காலத்தில் வளர்த்துவருகின்றமை வழமையான செயற்பாடாகும். அதுபோல் இவ்வருடமும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைவாக  அப்பகுதியில் மேய்பப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஆனாலும் எமது தமிழ் மக்கள் பூர்வீகமாக கால்நடைகளை மேய்த்துவரும் மேற்படி பிரதேசங்களில் அனுமதிக்கக் கூடாது, மேச்சல்தரை நிலத்தை பகிர்ந்து அம்பாறை மாவட்ட சிங்கள மக்களுக்கு வழங்குங்கள், தமிழ் மக்கள் அனைவரும் புலிகள் என குற்றம் சுமத்தி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்;பிட்டியே சுமணரெத்தின தேரரின் தலைமையில், வெள்ளிக்கிழமை அம்பாறை -  கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த செயற்பாடானது போரதீவுப்பற்று பிரதேச கால்நடைப் பண்ணையாளர்களாகிய எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண நிருவாக அலகான அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய எமது மாகாண எல்லைக்குள் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லையாயின் நாம் வேறு எங்கு செல்வது, நாம் வழமையாக எமது கால்நடைகளை மேய்த்துவரும் இடங்களில்தான் தற்போதும் எமது கால்நடைகளை வளர்த்து வருகின்றோம். 

தமிழ் மக்கள் அனைவரும் புலிகள் அவர்களை இப்பகுதிக்கு வரவிடக்கூடாது என புத்த பிக்கு தெரிவித்திருக்கின்றார் இவ்வாறான கருத்துக்கள் எமக்கு மனக்கீலேசத்தை ஏற்படுத்துகின்றது. 

அரசாங்கம் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், போதியளவு கால்நடை வளர்ப்புக்களுக்காக ஒதுக்கியிருக்கும் இந்நிலையில் எமது வாழ்வாதாரத்திற்குத் தடையேற்படுத்தும் வகையிலான மேற்படி செயற்பாடுகள் எந்த வித்தில் நியாம், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும், பிக்கு மிகமோசமான வார்த்தைகளால் பேசியுள்ளார், உரிய மேச்சல் தரைப் பகுதியில் எமது கால்நடைகள் மேய்ந்துவருவதற்கு தேரர் போன்றோர் தடைவிதிக்கும் முயற்சி போன்றன செயற்பாடுகளானது, தொடர்ந்து எமது தமிழ் மக்களை எவ்வாறு சுத்திரமாக செயற்பட முடியும் என்பதை தீர்மானிக்க முடியாதுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் நாட்டின் கிழக்கு மாகாணசபை, பிரதமர், மற்றும் ஜனாதிபதி, ஆகியேர் தலையீடு செய்து எமது கால்நடைகளை உரிய பிரதேசங்களில் மேய்ப்பதற்கு உடனடித்தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: