தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச இளைஞர்களை ஒன்றிறைத்து நடாத்தும் பிரதேச இளைஞர் முகாம் கோப் - 2016 செயற்றிட்டம், வெள்ளிக்கிழமை (11) மாலை
மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
போரதீவுப் பற்று பிரதேச இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளும் இம்முகாம் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நிறைவு பெறவுள்ளது.
இளைஞர்களிடையே அன்னியோன்னிய நட்பைப் பேணுதல், வினைத்திறன்களுடன் கூடி தீர்மானங்களை எடுத்தல், தீர்மானம் எடுக்கும் செயன்முறைகள், முரண்பாடுகளை இனம்காணல், மாற்று ரீதியிலான தீர்வுகளை இனம்காணல், பொருத்தமான மாற்று வழிமுறைகளை இனம்காணல், இசையும் ரசனையும், இலகுபடுத்தும் செயற்பாடுகள், ஆளுமை விருத்தியும் ஒன்றிணைத்தலும், திப்பாசறை, மென் திறன் விருத்திபோன்ற பல தலைப்புக்களில் இதன்போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இதன்போது கலந்து கொள்ளும் இளைஞர் யுவதிகளிலுமிருந்து திறமையான ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு என்.வி.கியூ. தர சான்றிதழும் வழங்கப்படவுள்ள இந்நிலையில் இவ்வேலைத்திட்டம் நாடுபூராகவுமுள்ள 334 பிரதேசங்களில் நடைபெற்று வருவதாக போரீவுப்பறந்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் சி.அருளாளந்தம் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment