18 Nov 2016

சிறுவர்களை பாடசாலை வளாகத்தில் மட்டுமின்றி புறச்சூழல்களிலும் பாதுகாக்கக் கூடிய மன நிலையை ஒவ்வொரு ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்

SHARE
சிறுவர்களின் நடத்தை தொடர்பாக ஏற்படுகின்ற சிறிய மாற்றங்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகவும் உன்னிப்பாக அவனிக்கவேண்டிய தேவை தற்காலத்தில் எழுந்துள்ளது இதன் ஊடாக சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு
உள்ளாக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என வெருகல் பிரதேச செயலாளர் எம் தயாபரன் தெரிவித்தார்;.

“சிறுவர்நேயப் பாடசாலை ஊடாக சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்தலும் சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல”; எனும் திட்டத்தின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வளவாளர் ஏ.உதயகுமார், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எம்.எம். சாபி மற்றும் மூதூர் கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டர் இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

சிறுவர்களை பாடசாலை வளாகத்தில் மட்டுமின்றி புறச்சூழல்களிலும் பாதுகாக்கக் கூடிய மன நிலையை ஒவ்வொரு ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது தற்காலத்தின் தேவையாகும் மிக முக்கியமாக கிராமப்புற பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இங்கு சிறுவர்கள் சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்கின்ற போது போதைப் பொருள் பாவனை, விழிப்புணர்வு இன்மை போன்ற பலவிடயங்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளது. இப் பிரச்சினைகளை இல்லாமல் செய்து இப் பிரச்சினைகளில் இருந்து சிறுவர்களை வெளியில் கொண்டு வரவேண்டும். அதற்காக  அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்கவேண்டும். உதாரணமாக பெற்றோர்களினாலும் சிறுவர்கள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனை சிறுவர்கள் வெளிப்படுத்துவதற்கு பயத்தில் உள்ளனர் இதற்கான காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையாகும். எனவே எமது சிறுவர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் நீங்கள் மிகவும் அவதானம் செலுத்தி செயற்படுவதன் ஊடாக எதிர் காலத்தில் துஷ்பிரயோகங்களை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் இதன் போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: