14 Oct 2016

அம்பிளாந்துறை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேறும். கிழக்கு விவசாய அமைச்சர்.

SHARE
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை விவசாயிகளின் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் ஏற்பாட்டில்  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராஜா ஆகியோரும், நவகிரி பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் க.பிரதீபன் மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டனர்.

நவகிரி குளத்தில் இருந்து வருகின்ற நீரானது கற்சேனை, நாவக்கேணி, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் பயன்படுத்தப்பட்டு மிகுதியான நீர் அத்தியாமுன்மாரி பாலத்தினூடாக பிரயோசனமற்ற வகையில் நேரடியாக ஆற்றில் விழுகின்றது. ஆகவே இதனை தடுத்து வாய்க்கால் ஒன்றினை அமைப்பதனால் அம்பிளாந்துறை நாகமுனையில் உள்ள புதுவெளிக்கண்டம் மற்றும் தென்கண்டம் ஆகிய 500 ஏக்கர் வயல்வெளிகளுக்கு சிறுபோக நெற்செய்கைக்கு நீர்பாச்சும் நிலைக்கு வந்தால் இன்னும் அதிகப்படியான விளைச்சலினை நாம் பெறலாம் எனவும், இங்குள்ள ஆற்றில் இருந்து வயல் நிலங்களுக்குள் உப்புநீர் உட்புகுகின்றமையினால் எதிர்பார்த்தளவு விளைச்சலினை பெறமுடியாதுள்ளது. ஆகவே இதற்கிடையே உள்ள தடுப்புநீர்க்கட்டினை அமைத்துத் தருமாறும் இந்த வயல்வெளிகளுக்காக செல்லகின்ற பாதையினையும் செப்பனிட்டுத் தருமாறும் அம்பிளாந்துறை விவசாயிகள் விவசாய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

இது தொடர்பாக விவசாய அமைச்சர் பொறியிலாளரிடம் இதற்கான மதீப்பீட்டினைப் பெறுமாறும், எதிர்வரும் வருடங்களில் ஒதுக்கப்படும் நிதிகளில் இருந்து இதற்கான அபிவிருத்திப் பணிகளினை பகுதி பகுதியாக செய்யலாம் என தெரிவித்தார். 










SHARE

Author: verified_user

0 Comments: