14 Oct 2016

சுரவணையடியூற்றில் 2017இல் புதிய பாடசாலை ஆரம்பம்

SHARE
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்விவலயத்தில் போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கிராமமான சுரவணையடியூற்றில் 2017ம் ஆண்டு ஆரம்பப் பாடசாலை ஒன்றினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்ற வெல்லாவெளி போரதீவுப்பற்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
போரதீவுப்பற்றுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 11.10.2016 பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளார் சாண் இராசமாணிகம் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்றது. 

இதில் சுரவணையடியூற்று கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் தங்களுடைய கிராமத்திற்கு ஒரு  பாடசாலை வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களுடைய கிராமத்தில் இருந்து தும்பங்கேணி பாடசாலைக்கு ஒன்றரைக்கிலோமீற்றர் தூரம் கால்நடையாக செல்லகிள்றார்கள் எனவும் இதனால் சிறிய மாணவர்கள் பலர் பாடசாலைக்கு செல்லாமல் இடைவிலகி செல்கின்றார்கள் என்றும் ஆகவே தங்களுக்கென்று ஒரு பாடசாலை வேண்டும் என்ற கோரிக்கை பல தடவைகள் முன்வைத்தும் இதுவரை எதுவும் நi;டபெறவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் அவர்களிடம் வினவியபோது, அதற்கான ஆவணங்களை கொண்டுவருமாறு கூறிய போதும் அந்த கிராமத்தவர்களின் முயற்சின்மையால் அது கைநழுவிவிட்டது என்று தெரிவித்தார். 
எதிர்வரும் 2017ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிப்தற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுமாறு  தீர்மானம் பெறப்பட்டுள்ளது.












SHARE

Author: verified_user

0 Comments: