29 Oct 2016

இலங்கையில் முஸ்லிங்களுடன் இணைந்து வாழும் சக சிறுபான்மையினத்தவரான இந்து மக்கள் வாழ்கின்றனர்

SHARE
இலங்கையில் முஸ்லிங்களுடன் இணைந்து வாழும் சக சிறுபான்மையினத்தவரான இந்து மக்கள்  அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்
நன்மையினால் தீமை தோற்கடிக்கப்பட்டதையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையை ஏற்படுத்தியமை​யையும் மற்றும் இருள் அகற்றி ஔி ஏற்றியதையும் தீபாவளிப் பண்டிகை  கொண்டாடப்படுவதில் பொதிந்துள்ள அர்த்தங்களாக இந்துக்கள் நம்புகின்றனர்.

என கிழக்கு  மாகாண முதலமைச்சர்​ ஹாபிஸ் நசீர் அஹமட் 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப் படடுள்ளதாவது.


முன்னர் தமிழர்கள் மற்றும் முஸ்லிங்களிடையே இருந்த நல்லுறவும் சகோதரத்துவமும் தற்போது அருகியுள்ளதை காண முடிகின்றது.

எனவே இந்த நாளில் இரு சாரார் மனதிலும் உள்ள கசப்புக்களை அகற்றி சிறுபான்மையினத்தவராய் விட்டுக் ​கொடுப்புக்களுடன் தமது உரிமைகளுக்காய் கரம்கோர்த்து    வீறு  நடைபோட வேண்டும்.

அத்துடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும்  மலையக  சகோதர்ர்கள் தமது  அன்றாட ஜீவியத்துக்காய் போராடி  வருகின்றனர்.

வடக்கு  கிழக்கு உள்ளிட்ட  பல பகுதிகளில் சிறுபான்மையினத்தவர்களின்  உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது

 எனவே இந்த நன் நாளில்  சிறுபான்மையினத்தவர்களான நாம் நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதற்கு உறுதி  பூண்டு நம்  தாய் நாட்டில் நமது உரிமைகளை  வென்றெடுப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்  எனகேட்டுக்கொள்கின்றேன்.



SHARE

Author: verified_user

0 Comments: