இந்த நாட்டில் நல்லாட்சி எனும் அரசினூடாக எமது மக்களுக்கான தீர்வினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். “தர்மம் எப்போதும் வெல்லும்” பிறந்திருக்கிக்கின்ற தீபாவளித் திருநாள் இந்தாட்டு மக்களின் வாழ்வில்
சாந்தியியையும்,சமாதானத்தினையும், நின்மதியையும் உண்டாக்கட்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்
திபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அன்றய அரக்கர்களின் அதர்மத்தனத்தின்கீழ் வாழ்ந்த மக்களை காப்பாற்றி, விமோசனம் வழங்கிய நாளே இந்த தீபத்திருநாளாகும் இது போன்றே இந்த நாட்டில் இடம் பெற்ற அதர்ம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது நல்ல ஆட்சி இந்த நாட்டில் பிறந்திருக்கின்றது. இது எமது மக்களின் வாழ்வில் நிரந்தர நிம்மதியை ஏற்படுத்த வேண்டும். இதுவே எமது மக்களின் அபிலாசையாகும் இதனை எவரும் தடுக்கவோ, இதனை தவறாக புரிந்து கொள்ளவோ முடியாது.
சாந்தி,சமாதானத்திற்கான ஒளி எமது மக்களின் மனங்களில் உண்டாக வேண்டும் அதற்கான ஒளிக்கீற்றினை இந்த அரசாங்கத்தின் ஊடாக எதிபார்த்து, எமது மக்கள் இன்னமும் நம்பிக்கையுடன். இருக்கின்றார்கள், என்பதனை இந்த நாளில் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். பிறந்திருக்கின்ற தீபாவளித்திருநாள் அனைத்து மக்களின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உண்டாக பிரார்த்திக்கின்றேன். என்பதேடு அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த தீபதிருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment