மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான திணைக்கள அதிகாரிகள் அவர்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் கடைமை புரிகின்றார்களே! தவிர தாங்கள் இருக்கும் வரை மக்களுக்கும், அவர்கள் சார்ந்த திணைக்களத்திற்கும் கடமை புரிவதாக எனக்குத் தெரியவில்லை. இதில் ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்.
ஆனால் இவ்வாறான அதிகாரிகள் தாங்கள் தொடர்ந்து பதிவியில் இருக்க வேண்டும் என்பதற்காக கடமை புரியாமல் தாங்கள் இருக்கும் வரைக்கும் சிறந்த கடமையை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் 7.3 மில்லியன் ரூபாய் செலவி மட்.மண்டூர் மகா வித்தியாலயத்தில் அமையப் பெறவுள்ள கற்றல்வள நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட் கிழமை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
இந்த நாட்டில் இலவசக் கல்வி சமன் என்றால் ஆசிரியர் வழங்கள் சமமான முறையில் பகிர்ந்தழிக்கப்பட வேண்டும். ஆனால் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் முறையாக வித்தில் ஆரிசிர் வளங்கள் பகிர்தளிக்கப்பட வில்லை. போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவுகின்றது.
மண்டூர் குருமண்வெளி ஓடத்துறைக்கு பாலம் அமைப்பதற்காக எனது முயற்சியினால் தற்போது ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் உதவியுடன் 850 மில்லியன் ரூபாய் செலவில் இப்பாலத்தை அமைப்பதற்கு தொகை மதிப்பீடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இதற்கான மதிப்பீட்டை அரசாங்க அதிபரூடாக அனுப்பப் பட்டுள்ளது. மிகவிரைவில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெறும்.
மண்டூர்-குருமண்வெளி ஓடத்துறைக்கு பாலம் அமையப்பெற்றால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிக விரைவாக அக்கரைக்குச் சென்று விடுவார்கள்.
மட்டக்களப்பு நகரிலே அமைந்துள்ள பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 4 பிரிவுகளைக் கொண்ட வகுப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றால் மட்டு நகரைச் சுற்றியுள்ள பாடசாலைகளான மாமாங்கம், கூளாவடி, பாலமீன்மடு, முகத்துவாரம், ஊறணி, போன்ற இடங்களிலுள்ள பாடசாலைகள் மூடும் நிலையில் காணப்படுகின்றன. கிராமப் புறங்களிலுள்ள ஆசிரியர்களின் தரமுமம் நகர்ப் புறங்களிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தியையும் கருத்திற் கொண்டு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சிறந்த பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலமை இப்பகுதியிலும் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணத் தோணுகின்றது. இவ்வாறு இடம்பெறாமலிருக்க இப்பிரதேசங்களுக்கும் ஆசிரியர்களின் வழங்கள் பகிர்தளிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான திணைக்கள அதிகாரிகள் அவர்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் கடைமை புரிகின்றார்களே! தவிர தாங்கள் இருக்கும் வரை மக்களுக்கும், அவர்கள் சார்ந்த திணைக்களத்திற்கும் கடமை புரிவதாக எனக்குத் தெரியவில்லை. இதில் ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம். ஆனால் இவ்வாறான அதிகாரிகள் தாங்கள் தொடர்ந்து பதிவியில் இருக்க வேண்டும் என்பதற்காக கடமை புரியாமல் தாங்கள் இருக்கும் வரைக்கும் சிறந்த கடமையை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
30 வருடமாக அகிம்மைப் போராட்டம் நடாத்தி பின்னர், 35 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற எமது பிரதேசம் தற்போது சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான எமது பிரதேசம் விரைவில் அபிவிருத்தியடைய வேண்டுமானால் அபிவியை அபிவிருத்தி செய்து அதில் முன்னேற்றமடைய வேண்டும்.
கடந்த காலத்தில் இலங்கையில் சகல திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் தமிழர்கள்தான் தலைமைப் பதவிகளை வகித்திருந்தார்கள். தற்போது இந்நிலமை மாறியிருக்கின்றது. எனவே நாம் எமது எதிர் கால சந்தத்தியினர்களினுடாக கல்வியை மேலாங்கச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும். என அவர் தெரிவித்தார்.
இதன்போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிதுரைரசசிங்கம், பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, இரா.துரைரெத்தினம், உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment