17 Oct 2016

2 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த ரிசானனுக்கு மகத்தான வரவேற்பு.

SHARE
மட்.களுதாவளை மகாவித்தியாலத்தைச் சேர்ந்த ஜெயரெட்ணம் ரிசானன் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி 2 தங்கப் பதக்கங்களை வெற்றி பெற்று
பாடசாலைக்கும், பட்டிருப்புக் கல்வி வலயத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமைதேடிக் கொடுத்துள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிமட்ட விளையாட்டுப் போட்டி கடந்த 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் ஆகிய 2 போட்டிகளிலும் பங்கு பற்றி மேற்படி 2 போட்டிகளிலும் முதலிடங்களைத் தட்டிக் கொண்டு 2 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்துள்ளார்.

13.70 மீற்றர் தூரம் குண்டெறிந்தும், 46.56 மீற்றர் தூரம் பரிதி வட்டம் வீசியும், இச்சதானையை நிலைநாட்டியுள்ளார். இந்நிலையில் இப்பாடசாலையைச் சேர்ந்த மு.சதிரகுமார் என்ற மாணவன் 17 வயதின் கீழ் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கு கொண்டு 3.10 மீற்றர் பாய்ந்து 7 ஆம் இடத்தைப் பெற்று வர்ணச் சாதனை படைத்துள்ளார்.

மேற்படி இரண்டு மாணவர்களையும் வரவேற்கும் நிகழ்வு திங்கட் கிழமை (17) இரவு நடைபெற்றது. களுதாவளை கல்லடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண் வத்திய இசையுடன் பட்டாசி வெடி முழக்கங்களுடன் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டன.  பின்னர் வாகனத்தில் வீர்ர்களை ஏற்றி களுதாவளைக் கிராமத்தைச் சுற்றினர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, பாடசாலை கல்விச் சமூகத்தினர் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், ஆலய பரிபாலன சபையினர், நலன் விரும்பிகள் என பலரும் ஒன்றுகூடி வீரர்களை பொன்னாடை போர்தியும்  மலர்மாலை அணிவித்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


































SHARE

Author: verified_user

0 Comments: