ஜனாதிபதி அண்மையில் படைத்தரப்பினரின் விருது வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மிக முக்கியமான படைத்தரப்பினர், முன்னைய பாதுகாப்பு செயலாளர் நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டது தொடர்பிலே விசனம் தெரிவித்திருப்பது ஜனாதிபதியின்
பால் ஒரு கேள்விக்குறியினை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இன்றைய செய்திகள் அவை சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கின்றது. என சொல்லப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியிலே ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என குறிப்பிட்ட கிழக்கு மாகாண சபையன் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள
பாடசாலை
நல்ல
பாடசாலை
எனும்
திட்டத்தின்
கீழ்
7.3 மில்லியன்
ரூபாய்
செலவி
மட்.முனைத்தீவு
சக்தி
வித்தியாலயத்தில்
அமையப்
பெறவுள்ள
கற்றல்வள
நிலையத்திற்கான
அடிக்கல்
நடும்
நிகழ்வு
திங்கட்
கிழமை (17) இடம்பெற்றது. இதன்போது
கலந்து
கொண்டு
கருத்து
தெரிவிக்கையிலே
அவர்
இவ்வாறு
தெரிவித்தார்.
இதில்
அவர்
மேலும்
குறிப்பிடுகையில்…
குற்றப்புலனாய்வு ஆணைக்குழு, நிதிக்குற்றப்புலனாய்வு ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகிய ஜனாதிபதி குறிப்பிட்ட இந்த மூன்று ஆணைக் குழுக்களும் 19வது திருத்தச் சட்டம் காரணமாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டு இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கின்ற ஆணைக் குழுக்கள் அவையாவும் சுயாதீனமான அமைப்புக்கள் இற்றில் எந்த விதமான அரசியல் தலையீடுகளும் இருக்க கூடாது. எனவும் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலையத்திலுள்ள பாடசாலைகளில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசலை எனும் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம், முனைத்தீவு சத்தி மகா வித்தியாலயம்,
மண்டூர் மகா விதியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் புதிய கற்றல் வள நிலையங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்
கிழமை இடம்பெற்றது.
இதன் ஒரு கட்டமாக மட் முனைத்தீவு சக்தி வித்தியாலயத்திற்காக கட்டப்பவுள்ள கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இ.பிரசன்னா மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளைநாயகம் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மாணவ மாணவியர்களுடைய கலை நிகழ்வகள்வுகளும் இதன் போது இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment