15 Feb 2026

தும்பங்கேணியில் வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு - பகுதியவில் சேதம் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்.

SHARE

தும்பங்கேணியில் வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு - பகுதியவில் சேதம் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் வெள்ளிக்கிழமை(13.02.2026)பதிவாகியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அனோஜன் சென்று நிலமையைப் பார்வையிட்டிருந்தனர்.

அந்த பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு வீடொன்று மின் கசிவினால் தீப்பற்றி எரித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அப்பிரதேசத்தில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்றமை தொடர்பில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என இதன்போது பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 










SHARE

Author: verified_user

0 Comments: