17 Oct 2016

கிரிக்கட் சுற்றுப்போட்டி

SHARE
மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த திருச்சபையின் 169 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமிர்தகழி மெதடிஸ்த திருச்சபையின் வாலிபர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு மட்டக்களப்பின் கற்கை நிறுவனங்களில் ஒன்றாக
ழுOXFORD COLLEGE   இன் அனுசரனையுடன், EVER GREEN  விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை (16) மாலை 5 ஓவர்களை கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டியானது நடைபெற்றது.

மென்பந்து சுற்றுப்போட்டிற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும், விசேட அதிதியாக எஸ்.ஜெயாலன் தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் அவர்களும், சுநஎ.டெரன்ஸ் வடக்கு, கிழக்கு சபா சங்கத் தலைவர் அவர்களும், எம்.சேதுவண்ணண் OXFORd COLLEGE   இணை இயக்குனர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இச் சுற்றுப் போட்டிற்கு 24 திருச்சபை அணியினர் கலந்து கொண்டனர்.  இதில் இறுதிச் சுற்றுப்போட்டிற்கு மட்டக்களப்பு சின்னஊறனி திருச்சபை அணியிரும், திருகோணமலை மெதடிஸ்த சி.அணியினரும் தெரிவாகி, இறுதி சுற்றுப்போட்டிற்கான நாணய சுழற்சியானது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் மூலமாக சுழற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
இப் போட்டியில் மட்டக்களப்பு சின்னஊறனி திருச்சபை அணியானது முதவாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது.





SHARE

Author: verified_user

0 Comments: