26 Sept 2016

தமிழரசுக் கட்சிக்கா உழைத்தவர்கள், பாடுபட்டவர்ககள் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை - யோகேஸ்வரன் எம்.பி

SHARE


தமிழரசுக் கட்சிக்கா உழைத்தவர்கள், பாடுபட்டவர்ககள் தேர்தல்களில் போட்டியிட முடியாத
நிலை எமது தமிழரசுக்கட்சியில் தேன்றியுள்ளது இதனை ஆதரவாளர்கள் தட்டிக் கேட்க வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்றஉறுப்பினர் சீ.யோகேஸ்வரன்  தெரிவித்தார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளைக் கூட்டம் கிளையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமியில் சனிக்pழமை மாலை (24) நடைபெற்றது.

நாடாளுமன்றஉறுப்பினர். சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் கிளைச் செயலாளர் துஸ்யந்தன் மற்றும் கட்சியின் நீண்டாகால உறுப்பினர்கள், தற்கால உறுப்பினர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இக் கூட்டமானது மட்டக்களப்பில் தந்தை செல்வாவுக்கு சிலை அமைப்பது தொடர்பாக அராய்வதற்காகவே கூட்டப்பட்டதாக கிளையின் தலைவர் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

தந்தை செல்வாக்கு சிலையெடுப்பது வரவேற்கத்தக்கது இது தொடர்பில் அமைக்பப்ட்ட குழுவில் தந்தை செல்வா வாழ்ந்த காலத்தில் தமிழரசுக்  கட்சி தோல்வியடைய வேண்டும் என்று  தந்தைசெல்வாவுக்கு எதிராக செயற்பட்டவர்கள் உள்வாங்கப்படக் கூடாது இது தந்தைசெல்வாவுக்குச் செய்யும் துரோகம் என கட்சியின் பழைய உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறிஸ்கந்தராசா எடுத்துரைத்தார். இதனை சபையில் இருந்த சிலர் ஏற்றுக் கொண்டு தங்களது கருத்தினையும் முன்வைத்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக எழுந்த தலைவர் அமைக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களின் பெயர்களை வாசித்து இதில் யார் அவ்வாறு செயற்பட்டவர்கள் கூறுங்கள் என கேட்டுக்கொண்டார். இதற்கு எவரும் பதிலளிக்க முன்வரவில்லை.

 குறித்த சர்ச்சைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே  பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

சட்த்தரணி சிறிஸ்கந்தராசா அவர்களின் ஆதங்கத்திற்கு நான் மதிப்பளிக்கின்றேன். ஆனால் நான் அவருக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றேன் தந்தைசெல்வாவை செகுடன் என்று கூறிய ஜீ. ஜீ.பொன்னம்பலத்தையும் ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய பாகுபாடு பார்க்காத மனிதர் தந்தை செல்வா. எனவே தமிழசுக் கட்சியில் இடையில் இணைந்தவர்களையும் இந்த சிலையெடுப்பதில் இணைத்துக் கொள்வதில் தவறில்லை என்று நான் நினைக்கின்றேன்.ஏனென்றால் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் 

அண்மையில்கூட எமது கட்சியில் இல்லாத வேறுகட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் தமிழரசுக் கட்சியில்  உள்வாங்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒரு காலமும் எங்களுடன் இணந்து இவர்கள் செயற்பட்டவர்கள் அல்ல. நாங்கள் 2012 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி மகா நாட்டை மட்டக்களப்பில் நடாத்தினோம் இதிலும் ஆதரவாளர்களின் பங்களிப்பு சற்று சற்று குறைவாகவே இருந்தது. ஏன் தற்போது இருக்கின்ற பொதுச் செயலாளர் கூட அந்த மாகா நட்டுக்கு ஆதரவு தருவதற்கு வரவே இல்லை காரணம் அனைவரும் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் பயந்து கொண்டு ஒதுங்கிக் கொண்டு அனைவரும் அமைதியாக உள்ளே இருந்தார்கள். 2012 ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்து எங்களை சந்திக்க வேண்டாம் என்று கூறியவர் கூட தற்போது கட்சியின் முக்கிஸ்தராக இருக்கின்றார்.

இவ்விடத்தில் இன்னோர் விடயத்தையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் 2015 ஆம் ஆண்டு முன்னாள் போராளிகளாக இருந்த பாதர் என்று சொல்லப்படுபவர் வந்தாறுமூலையில் மஹிந்தராஜபக்சவுக்கு அலுவலகம் அமைத்து அவரின் வெற்றிக்கு உழைத்தவர். வாக்கெண்ணும் நிலையத்திலும் கடமையில் ஈடுப்பட்டிருந்தார். இந் தேர்தலில் மைத்திரி வென்ற பின்னர் தனது சித்தபபாவின் மகனான தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடாக கட்சிக்குள் நுளைந்து தற்போது அதே பொதுச் செயலாளர் அவருக்கு மக்கள் தொடர்பாடல் என்கின்ற பதவி வழங்கி சம்பளமும் வழங்கப்பட்டு வருக்கின்றது.


இவ்வாறு இருக்கின்ற நிலையில் தற்போது தமிழரசுக்கட்சியில் ஒருசிலரை இணைத்துக் கொள்வதில் தவறில்லை. தமிழரசுக் கட்சிக்காக கஸ்ரப்பட்டவர்கள் தேர்தலில் போட்யிடுவதற்கு இணைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கின்றது இதனை ஆதரவாளர்கள் தட்டிக் கேட்க வேண்டும். என இதன் போது தெரிவித்தார்.  



SHARE

Author: verified_user

0 Comments: