மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை 22.09.2016 அதிகாலை இடம்பெற்ற ரயில் என்ஜின் விபத்திற்குக் காரணமாக கவனக்குறைவாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தில்
4 ரயில்வே அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே அன்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதன் காரணமாக இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன், ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும் சேதமடைந்தன.
ஆயினும், பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை.
உதயதேவி ரயில் கொழும்பு நோக்கிப் புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், பிறிதொரு பக்கமிருந்து எதிர்பாராத விதமாக வந்த ரயில் இஞ்சின் மோதியதால் விபத்து சம்பவித்தது என மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் எம்.பி. அப்துல் கபூர் தெரிவித்தார்.
இது குறித்து உள்ளக விசாரணையில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள், 4 ரயில்வே அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். போக்கு வரத்து அணுகுதலுக்குப் பொறுப்பாகவிருந்த ரயில்வே அதிகாரி ஒருவர் உட்பட மேலும் மூன்று என்ஜின் சாரதிகளுமே தற்காலிக பணியிடை நீக்கம் செயயப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment