26 Sept 2016

வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கான சித்திரத்தேர் அமைப்பதற்கான திருப்பணிவேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

SHARE

கிழக்கு மாகாணத்தில் வரலாற்று புகழ்வாய்ந்த மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றையும் ஒருங்கே பெற்றமைந்த சிறப்புக்குரிய வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கான
சித்திரத்தேர் அமைப்பதற்கான திருப்பணிவேலைகள் ஆலயமுன்றலில் ஆலயத்தின் போசகரும் பிரதேச செயலாளருமான மா.தயாபரன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது 


நிகழ்வில் பிரதம அததியாக இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தஜி மகாராஜ் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் இராமகிருஸ்ண மிசன் ஆலயத் தலைவர் சு.அரசரெட்ணம், மற்றும் ஆலய நிருவாக சபையினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர் தேரினை அமைப்பதற்கான ஆரம்ப நிதியினை ஆதினி அவர்கள் வழங்கிவைதார்.




SHARE

Author: verified_user

0 Comments: