இலங்கையின் பல்வேறு அரச திணைக்களங்களிடையே இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி “சி” பிரிவில் இடம்பிடித்த இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் அணியினர்
தாய்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகளுக்காக இந்த வாரம் தாய்லாந்து பயணமாகவுள்ளதாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் அணியினர் லீக் போட்டிகள், நொக் அவுட் போட்டிகள் மற்றும் அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்துப் போட்டிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்.
தாய்லாந்து பயணமாகவுள்ள இந்த அணியில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேர் உள்ளடங்கியுள்ளனர்.
அத்தோடு தாய்லாந்து போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை அணிவீரர்களில் அநேகமானோர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வணியில் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என். முபீன் நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு இவ்வணியினரின் பயண ஒழுங்குகள் தொடர்பான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
0 Comments:
Post a Comment