27 Oct 2025

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

SHARE

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பில் திங்கட்கிழமை(27.10.2025) முன்னெடுப்பட்டது. 

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின்  உத்தரவுக்கமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கு அமைய மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் திங்கட்கிழமை காலை மாவட்ட போக்குவரத்து திணைக்களம். மற்றும் மட்டக்களப்பு தலைமையக  நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் இணைந்து விசேட வீதி பரிசோதனையை முன்னெடுத்தனர். 

இதன்போது பிரதான வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்,  போக்குவரத்து பாவனைக்கு உரிய முறையில் காணப்படாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக வாகனங்கள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் பிரேக், டயர்கள், சிக்னல், லைற், என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் வாகனங்களை  திருத்தி அமைப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டன. 

இதனை உரிய முறைமையைக் கடைபிடிக்காத வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. இன்றைய பரிசோதனையின் போது சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

இந்த விசேட பரிசோதனை  செயல்திட்டத்தின்போது மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி மற்றும் மோட்டார் திணைக்கள உயர் அதிகாரிகள் போக்குவரத்து பொலிசாரும்  கலந்து கொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: