30 Aug 2016

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 5 கிராமங்களுக்கு 200 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்திற்கென மீள்குடியோற்ற அச்சினால் ஒரு வீடு மாத்திரமே ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில்
செய்தி வெளி வந்துள்ளமை எமக்கு மிகுந்த மனவேதனையளிக்கின்றது என போரீவுப்பற்று பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றன.

மேற்படி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களுக்கும் அதிகளவான வீடுகள் ஒழுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்நிலையில் கடந்த யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுப் போயிருக்கும் எமது 43 கிராம சேவகர்களை உள்ளடக்கிய போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கென ஒரே ஒரு வீடு மாத்திரம் ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள. இந்விடையம் குறித்து போரதீவுப்பற்று பிரதேச பொது அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்விடையம் தொடர்பில் மட்டக்களப்பு கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடும்செழியனிடம்  வினவியபோது….

போரதீவுப்பற்று பிரதேசம் மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லை  மாறாக அப்பகுதி ஐரோப்பிய யூனியனின் வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒரு பிரதேசம் இரண்டு வீடமைப்புத் திட்டங்களுக்குளும் உள்ளடக்கப்படாது அதனடிப்படையில் போரதீவுப்பற்று பிரதேசம் மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ளடக்காமல், ஐரோப்பிய யூனியனின் வீட்டுத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 5 கிராமங்களுக்கு 200 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பெறுமதி 8 லெட்சம் ரூபாய் ஆகும்.  

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று, செங்கலடி  ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தலா 200 வீடுகள் வீதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் வீடுகள் நிருமாணிக்கப்படவுள்ளன என  அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: