எமது நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களை நேரடியாக இணைத்துக் கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டமானது, எனது நாட்டின் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் சிந்தனையில் உதித்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்
பணிப்பாளர் நாயகம் சட்டத்தரனி எரந்தவெலியங்கே அவர்களின் வழிகாட்டலில் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என தேசிய இளைஞர் வேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யுத் கோ ரலன் எனும் தொணிப் பொருளின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் பிரஜைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பொரியபோரதிவு பாரதி முன்பள்ளி பாடசாலைக்குரிய சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28) பெரியபோரதீவு பாரதி இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.டினேஸின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் தெரிவிக்கையில்…
இந்த வேலைத்திட்டம் நாட்டு மக்களின் வரவேற்பையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளதோடு, இளைஞர்கள் மத்தியில் ஒரு புத்துணர்வையும், தன்நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இளைஞர் கழகங்கள் வெறுமனே விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதனையும், சிரமதானப் பணிகளை மேற்கொள்வதனையும் மாத்திரமே நோக்காகக் கொண்டு செயற்படவில்லை என்பதனையும், அதனையும் தாண்டி பல காத்திரமான பணிகளையும் மேற்கொள்கின்றன என்பதை இந்தச் சமூகத்திற்கு வெளிகாட்டுவதற்கு இளைஞர்களுக்குக் கிடைத்த ஒருபெரும் சந்தர்ப்பமே இந்த வேலைத்திட்டமாகும்.
இதனை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தோடு வெறுமனே தங்களது காலத்தையும், நேரத்தையும் பயனற்றவிதத்தில் கழித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை இனம் கண்டு அவர்களையும் இந்த வேலைத் திட்டத்தின் பங்காளர்களாக ஆக்குவதன் மூலம் நாட்டின் சட்டத்திற்கும், சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியும்.
மேலும், இளைஞர்கள் மத்தியில் சமூகசேவை மனப்பாங்கை அதிகரிக்கச் செய்யவும், தங்கள் கிராமங்களின் முக்கிய மற்றும் அத்தியாவசிய தேவைகளைத் தங்களால் நிவர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் வழி வகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment