உலக சமுத்திர தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக புதன்கிழமை (ஜுன் 8 2016) மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்தின் கண்டலடி கடற்கரைப் பகுதி சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.
வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகியின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் அலுவலர்களும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச செயலாளர்….
சமுத்திரம் எனும் அளப்பரிய வளத்தின் அவசியத்தன்மை குறித்தும், தற்காலத்தில் அதன் இயற்கைச் சமநிலை மாற்றமடைந்து செல்வதற்கு ஏதுவான காரணங்கள் குறித்தும் இயற்கையை அதன் செழுமை மாறாது பேணிப்பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
நிழ்வின் இறுதியில் வாகரைக் கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பாத்திரங்கள், கண்ணாடி, இறப்பர் மற்றும் உக்கலடையாத பொருட்கள் சிரமதான நடவடிக்கை மூலம் பிரதேச சபையின் வாகன உதவியுடன் கடற்கரைப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment