9 Jun 2016

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்திற்கு பணிப்பாளர் நியமனம்

SHARE
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கணினி விஞ்ஞான துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த செய்யித் ஸாபித் நியமனம் பெற்றுள்ளார். கூடவே அவர் இப்பல்கலைக் கழகத்தின் தகவல்
தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது என்றும் அவர் வியாழக் கிழமை 09.06.2016 தெரிவித்தார்.

செய்யித் ஸாபித் மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தில் கணினி விஞ்ஞான துறையில் முதுமாணி ஆய்வு பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்தவராகும். இவர் மட்டக்களப்பின் பிரபல ‘பாவலர்’ சாந்தி முஹைதீனின் நான்காவது புதல்வராவார்.

SHARE

Author: verified_user

0 Comments: