மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கல்லடி பிரதேசத்திலுள்ள உணவு விடுதியொன்றில் வாடிக்கையாளருக்கும் கடை ஊழியர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிவடைந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் ஒருவர் பாண் வாங்குவதில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறி கடைசியில் கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கத்திக்குத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உணவு விடுதி நடத்துபவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கத்திக்குத்துக்குள்ளான நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடைக்கண்ணாடிகள் அலுமாரிகள் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment